கரு தலைமையில் புதிய அரசியல் கூட்டணி! முக்கிய புள்ளிகள் இணைவு!!

முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் புதியதொரு அரசியல் கூட்டணி அமையவுள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் இடம்பெற்றுவருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

ஆளுங்கட்சியிலுள்ள முக்கிய சில அரசியல் பிரமுகர்கள் இணைந்தே இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துவருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.

இதன்பிரகாரம் ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய புள்ளிகள் வெளியேறக்கூடும் எனவும், கருவின் தலைமைத்துவத்துக்கு ரணிலும் பச்சைக்கொடி காட்டியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Latest Articles