தேயிலை உற்பத்தியில் தரமற்ற இரசாயனப் பதார்த்தங்கள் சேர்க்கப்பட்ட கழிவுத் தேயிலைத் தூள் உற்பத்தி அதிகரித்து வருவதாக பாவனையாளர்கள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
நாட்டில் தற்போழுது நிலவுகின்ற பொருளாதார பின்னடைவு காரணமாக தரமான தேயிலை தூளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளதால் தரம்குறைந்த தேயிலை தூளின் பாவனை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

எனினும் தரம்குறைந்த தேயிலைத் தூள் உற்பத்தியாளர்கள் அதிகரித்த கொள்ளை இலாபம் பெற முயற்சிப்பதால் சுண்ணாம்பு உட்பட இரசாயனப் பதார்த்தங்களையும் கலந்து தேயிலைத் தூளை உற்பத்தி செய்வதாகவும் இதனால் சுகாதார சீர் கேட்டை உண்டாக்கும் தேயிலைத் தூளை வருமானம் குறைந்த மக்கள் பாவனைக்கு எடுப்பதாகவும் குறிப்பாக தேயிலை உற்பூத்தியை மேற்கொள்ளும் தோட்ட தொழிலாளர்களுக்கே தரமான தேயிலை தூள் கிடைக்காததால் தரங்குறைந்த தேயிலைத்தூளை தேநீருக்காக பயன்படுத்துவதாகவும் கவலை தெரிவிக்கப்படுகிறது.
தேகாரோக்கியத்துக்கும் சுகாதார சீர்கேட்டுக்கும் களங்கமாக விளங்கும் கழிவுத் தேயிலை உற்பத்தியைக் கண்காணிக்க முறையான திட்டங்கள் கண்காணிப்புகள் இன்மையால் இம்முயற்சிகள் பரவலாக இடம்பெ றுவதாக தெரிவிக்கப்படுகிறது.










