காச்சாமலை தொழிற்சாலை மேலும் 6 மாதங்களுக்கு திறக்கப்படாது! தொழிலாளர்கள் எதிர்ப்பு!!

தமக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டதாகவும், தொழிற்சங்க பிரமுகர்கள் திட்டமிட்ட அடிப்படையில் காட்டிக்கொடுத்துவிட்டனர் எனவும் ஹெல்பொட, காச்சாமலை தோட்டத் தொழிலாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஹெல்பொட காச்சாமலை தோட்டத்தில் 100 வருடங்களுக்கு மேலாக இயங்கிய தொழிற்சாலை ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்டுள்ளது. விரைவில் திறக்கப்படும் என்ற உறுதிமொழியுடனேயே அது மூடப்பட்டது.

எனினும், குறிப்பிட்ட கால எல்லைக்குள் தொழிற்சாலை திறக்கப்படாததால் அதனை மீள திறக்குமாறு வலியுறுதில் காச்சாமலை தோட்ட தொழிலாளர்கள் சிலர் ஆறு நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஆனால் தொழிற்சாலையை மீள திறப்பதற்கு மேலும் 6 மாதம் தேவையென நிர்வாகம் கோரியுள்ளது, இதற்கு தொழிற்சங்கமும் அனுமதி வழங்கியுள்ளது. இதனை ஏற்கமுடியாது, இம்மாதத்துக்குள் தொழிற்சாலை திறக்கப்படவேண்டும் என வலியுறுத்தியே போராட்டம் இடம்பெற்றது, ஆனால் 6 மாத அவகாசத்தை வழங்கி எமது போராட்டம் காட்டிக்கொடுக்கப்பட்டுவிட்டது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கான சூழ்ச்சியே இதுவென்றும், சம்பளம், சலுகைகள் வழங்கப்படும் எனக்கூறப்பட்டாலும் அதனை நம்பமுடியாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles