காதலியின் வீட்டுக்கு சென்ற நிலையில் மாயமான இளைஞன் 15 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!

தனது காதலியின் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் காணாமல்போயிருந்த காதலன் 15 நாட்களுக்கு பிறகு காட்டு பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குருணாகல், குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 31 வயதான இளைஞர் ஒருவரே, புத்தளம், மாதம்பே பகுதியில் உள்ள வனத்தில் இருந்து இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 22 ஆம் திகதியே இளைஞர் காணாமல்போனார் என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இளைஞன் சென்றதாகக் கூறப்படும் காதலியின் வீட்டுக்கு பொலிஸார் சென்றபோது அவர்கள் தலைமறைவாகியுள்ளனர். காதலியின் தந்தையின்கீழ் சேவையாற்றும் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையிலேயே இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை தேடும் பணி இடம்பெறுகிள்றது.

ஆனால் அவர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தப்பட்ட நாளிலேயே இவர் கொல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Related Articles

Latest Articles