கிம்புலா எல குணாவின் சகா ஐஸ் போதைப்பொருளுடன் கைது

வௌிநாட்டில் தலைமறைவாகியிருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் கிம்புலா எல குணா என்றழைக்கப்படும் சின்னையா குணசேகரவின் நெருங்கிய உறவினர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரேண்ட்பாஸ் – பதுள்ளவத்த பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 76 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கிரேண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles