கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொடை சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் பலர் மறைந்துள்ளனர். பொதுமக்கள் இதுவிடயத்தில் உதவ வேண்டும். இன்றேல் கிழக்கில் கொரோனா பரவுவதை தடுக்கமுடியாது போகலாம் என்று கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அழகையா லதாகரன் தெரித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
கிழக்கு மாகாணத்தில், திருகோணமலை மாவட்டத்தில் 06 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேரும் கல்முனைப் பிராந்தியத்தில் 09பேரும் அம்பாறையில் ஒருவருமாக கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
பேலியகொடை மீன்சந்தை சம்பவத்தையடுத்து எமக்கு கிடைத்த தகவலின்படி சந்தேகத்தின்பேரில் பலரை தேடிப்பிடித்து தனிமைப்படுத்தி PCR பரிசோதனை செய்தபோது இந்த 27 பேர் தொற்றுக்குள்ளானது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கல்முனைப் பிராந்தியத்தில் கல்முனைக்குடியில் 03 பேரும் நிந்தவூரில் 01 பெண்மணியும் பொத்துவிலில் 05 பேருமாக 09 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.










