‘கிழக்கு முனையத்தை விற்கவே கூடாது’ – சுதந்திரக்கட்சி வலியுறுத்து

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யக்கூடாது என்று அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமூன மைத்திரிபால சிறிசேன கூறியவை வருமாறு,

” நான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்திலும் துறைமுகத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அந்த வேண்டுகோளை நான் ஏற்கவில்லை.

அத்துடன், கிழக்கு முனையத்தை வெளிநாட்டிடம் ஒப்படைக்கமாட்டேன் என துறைமுக ஊழியர்களுக்கும் உறுதிமொழி வழங்கினேன். எனவே, அந்த உறுதிமொழியில் – கொள்கையில் நான் உறுதியாக இருக்கின்றேன். சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடும் இதுவே. எந்தவொரு காரணத்துக்காகவும் கிழக்கு முனைத்தை விற்பனை செய்ய – விட்டுக்கொடுக்க இணக்கம் தெரிவிக்க முடியாது.” – என்றார் மைத்திரி

Related Articles

Latest Articles