‘குடு’ காரர்களே தற்போது காலி முகத்திடல் போராட்டக்களத்தில் தங்கியுள்ளனர். இவர்களை கட்டுப்படுத்துவதற்கு அவசரகால சட்டம் அவசியம்.” – என்று ஆளுங்கட்சி பிரதம கொடறாவும், அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அவசரகால சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், காலி முகத்திடல் என்பது பொருளாதார கேந்திர நிலையம். சுற்றுலாத்துறையுடன் சம்பந்தப்பட்ட பகுதி. எனவே, அங்கிருந்து போராட்டக்காரர்கள் அகற்றப்பட வேண்டும். அவர்களுக்கு மாற்று இடங்களை வழங்கலாம் எனவும் அமைச்சர் யோசனை முன்வைத்தார்.
போராட்டக்காரர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள், படையினரை படுமோசமாக விமர்சித்தனர், படையினரைவிட பிரபாகரன் சிறந்தவர் என்றுகூட குறிப்பிட்டனர். இது குறித்து பொன்சேகாவின் நிலைப்பாடு என்ன எனவும் பிரசன்ன ரணதுங்க கேள்வி எழுப்பினார்.










