கிராண்ட்பாஸ் பகுதியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கிராண்ட்பாஸ் மஹவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் தொட்டலக மஹவத்தையை சேர்ந்த “குடு சுமங்கலி” என்றழைக்கப்படும் பிரியங்கிகா சுமங்கலி (44) என்பவராவார். கைது செய்யப்படும் போது சந்தேகநபர் கிட்டத்தட்ட 203 கிராம் ஹெரோயின் வைத்திருந்தார்.
சந்தேக நபர் போதைப்பொருள் ஏற்றிக்கொண்டு வீதியில் பிரவேசிப்பதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை போதைப்பொருளுடன் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்படும் போது, சந்தேக நபர் அரிசிப் பொட்டலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போதைப்பொருள் பொதியை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபர் நேற்று (12) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
