குட்டி தேர்தலில் ஜே.வி.பி. வென்றால் கோவணத்துடன் ஓடுவேன் – சனத் நிஷாந்த சவால்

” உள்ளாட்சிசபைத் தேர்தலில் மொட்டு கட்சியை (ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன) விடவும் ஜே.வி.பி. (தேசிய மக்கள் சக்தி) ஒரு வாக்கையாவது அதிகம் எடுத்தால் கோவணத்துடன் ஒடுவதற்கு நான் தயார்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.

காலி முகத்திடல் போராட்டக்களம் முதல் ஜனாதிபதி செயலகம்வரை இவ்வாறு ஓடுவதற்கு தான் தயார் எனவும் அவர் கூறினார்.

சமூக ஊடகமொன்றுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த நேர்காணலொன்றை வழங்கினார்.

இதில் உள்ளாட்சிமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அதிக வாக்குகளை பெறும் என நேர்கண்டவர் குறிப்பிட்டார்.

இதனை சனத் நிஷாந்த மறுத்தார்.

அவ்வேளையில் சனத் நிஷாந்தவுக்கு சவாலொன்று விடுக்கப்பட்டது.

அதாவது மொட்டு கட்சியை விடவும் ஜே.வி.பி. ஒரு வாக்கையாவது அதிகம் பெற்றால் கோவணத்துடன் ஓட வேண்டும் என நேர்கண்டவர் குறிப்பிட்டார்.

அதனை சனத் நிஷாந்த ஏற்றார். சிலவேளை ஜே.வி.பி. குறைந்த வாக்குகளைப் பெற்றால் நீங்கள் ஓட வேண்டும் என நேர்கண்டவருக்கு சனத் நிஷாந்த சவால் விடுத்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles