அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற பாடசாலைக்கு இடையிலான டி.பி.ஜாயா மற்றும் அனுருத்த சானக்க பண்டார ஜாபகார்த்த கிண்ணத்துக்கான குத்துச்சண்டை போட்டி கடந்த செப்டம்பர் (2026) 09ம் திகதி முதல் 13ம் திகதி வரை கண்டி-பிலிமத்தலாவ தீரானந்த தேசிய பாடசாலையில் நடைபெற்றது.
இப்போட்டியில் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரி சார்பாக 02 மாணவிகள் பங்குபற்றினர். அவர்களில் தரம் 10 (பி)இல் கல்வி பயிலும் மாணவி செல்வி கி. லதூர்ஷியா என்ற மாணவி இறுதிபோட்டி வரை விளையாடி வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்து பாடசாலைக்கும் தனது பெற்றோருக்கும் பெருமைசேர்த்துள்ளார்.
இந்த வெற்றிக்கு ஒத்துழைப்பு நல்கிய அதிபர் அவர்களுக்கும் பாடசாலை நிர்வாக குழுவினருக்கும் பகுதி தலைவர்களுக்கும் பாட ஆசிரியர்களுக்கும் விசேடமான வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு மற்றும் இந்த மாணவிகளுக்கான குத்துச்சண்டை பயிற்றுவிப்பினை வழங்கிய ஆசிரியர் திரு. செ.செபஸ்டியன் அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரித்தாவதாக.
*இந்த மாணவி ஆசிரியர்களான திரு. கிருஸ்ணகுமார் மற்றும் இந்திரா ஆகியோரின் புதழ்வியாவார்.
*அத்தோடு வரும் ஒக்டோபர் மாதம் 05ம் திகதி முதல் 09ம் திகதி வரை கொழும்பு சுகதாச உள்ளக அரங்கில் நடைபெறும் தேசிய விளையாட்டு விழா (ALL ISLAND SCHOOL GAMES FESTIVAL- Boxing Championship) போட்டியில் மாணவி கி.லதூர்ஸியா இந்த வெற்றி மூலம் பங்குபற்றுவதற்கான தகுதியை பெற்றுள்ளார் என்பதோடு ஏற்கனவே நடந்து முடிந்த டி.டி. முனசிங்க மற்றும் மத்திய மாகாண போட்டிகளில் பங்குபற்றி முறையே வெண்கல, வெள்ளி பதக்கங்களை சுவீகரித்த கேம்பிரிட்ஜ் கல்லூரியில் தரம் 09ல் கல்வி பயிலும் மாணவி யு.தன்யசிரி என்ற மாணவியும் பங்குபற்றம் வாய்ப்பினை பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.










