குரங்கு உள்ளிட்ட விலங்குகளால் வருடாந்தம் ரூ. 20 பில்லியன்வரை இழப்பு!

வன விலங்குகளால் ஏற்படுத்தப்படும் பயிர்ச் சேதங்களால் நாட்டுக்கு வருடாந்தம் 17 முதல் 20 பில்லியன் ரூபாவரை இழப்பு ஏற்படுவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

வன விலங்குகளால் வருடாந்தம் 31 ஆயிரம் மெற்றிக் தொன் மரக்கறிகள் மற்றும் பழங்கள் இழக்கப்படுவதாகவும், வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களைத் தடுப்பதற்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து உத்திகளும் தோல்வியடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்

2022ஆம் ஆண்டு குரங்குகளால் உண்ணப்பட்டு அழிக்கப்பட்ட தேங்காய்களின் அளவு 200 மில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles