குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்கள்

கடந்த இரண்டு வருடகால ஆட்சிக் காலத்தில், சவால்களுக்கு மத்தியில் குறைவான வளப் பயன்பாட்டுடன் பாரிய வேலைத்திட்டங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடைமுறைப்படுத்தி வருகின்றார்.

நாடு பூராகவும் செயற்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் உள்ளிட்ட பாரிய வேலைத்திட்டங்களுக்காகப் பயன்படுத்தும் ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் உள்ள முழுமையான ஊழியர்கள் மற்றும் வாகன எண்ணிக்கை என்பன, நல்லாட்சிக் காலத்திலிருந்த ஊழியர் மற்றும் வாகன எண்ணிக்கையில் மூன்றில் ஒரு (1/3) பகுதியாகும்.

விடயம் இவ்வாறு இருக்கும்போது, சரியான தகவல்கள் அல்லது தரவுகளை ஆய்வு செய்யாமல், ஜனாதிபதி அலுவலகத்தின் வாகனப் பயன்பாடு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி, நேற்று (19) பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட விடயங்கள் உண்மைக்குப் புறம்பானதும் சரிவர ஆய்வு செய்யாமலும் முன்வைக்கப்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலகத்தில் சேவை புரிகின்ற எந்தவோர் அதிகாரியும் வாகனத் தொடரணியைப் பயன்படுத்துவதில்லை என்பதை பொறுப்புடன் கூற வேண்டும். அதேபோன்று, அதிகாரிகள் தமது பதவிக்குரிய வாகனத்தைக்கூட பயன்படுத்தாது, கடமைக்கு ஏற்ற வகையில் பட்டியலில் உள்ள வாகனங்களையே குறித்த கடமையை நிறைவேற்றுவதற்காகப் பயன்படுத்துகின்றனர்.

அதனால், சந்திம வீரக்கொடி உண்மையான விடயத்தை அறியாது, இவ்வாறு தவறான தகவல்களை முன்வைப்பது வருந்தத்தக்க விடயமாகுமென ஜனாதிபதி அலுவலகம் சுட்டிக்காட்டுகின்றது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles