குளவிக்கொட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி! சென்கூம்ஸ் தோட்டத்தில் சோகம்!!

லிந்துலை, சென்கூம்ஸ் தோட்டத்தில் நேற்று மாலை குளவி கொட்டுக்கு இலக்காகிய ஒருவர் பலியாகியுள்ளார்.

தொழில் முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியிலேயேஅவர் இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.

லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சென்கூம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Related Articles

Latest Articles