ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைத்து கூட்டணி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது என தெரியவருகின்றது.
பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு சஜித் அணியால் முன்வைக்கப்பட்ட கடும் நிபந்தனைகளாலேயே கூட்டணி முயற்சி சாத்தியமாகவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதனால் பொதுத்தேர்தலில் தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தி களமிறங்கவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய தரப்புகள் இணைந்து தனித்து போட்டியிடவுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுதினம் வெளியிடப்படும் என தெரியவருகின்றது.










