கென்யாவில் வரலாறுகாணாத வறட்சி – ஊருக்குள் புகுந்த 11 சிங்கங்களை சுட்டுக்கொன்ற மக்கள்…!

கென்யாவில் வறட்சியை முன்னிட்டு ஊருக்குள் புகுந்த சிங்கங்கள் மற்றும் மனிதர்கள் இடையேயான மோதல் சமீப காலத்தில் அதிகரித்து உள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவில் கிளிமஞ்சாரோ என்ற மலை பிரசித்தி பெற்றது. இதன் அருகே கஜியாடு கவுன்டி பகுதிக்கு உட்பட்ட அம்போசெலி உயிர்சூழல் பகுதி அமைந்து உள்ளது. இது யுனெஸ்கோ அமைப்பால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கென்யாவின் தென்பகுதியில் அமைந்த இந்த பகுதியில் வசித்து வந்த 11 சிங்கங்கள் வரை கடந்த வாரத்தில் கொல்லப்பட்டு உள்ளன. அவற்றில் 6 சிங்கங்கள் கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்டு உள்ளன என அந்நாட்டு வனத்துறை தெரிவிக்கின்றது.

இந்த வார தொடக்கத்தில் ஆப்பிரிக்காவின் மிக வயது முதிர்ந்த சிங்கங்களில் ஒன்றான லூன்கிட்டோ (வயது 19), பாதுகாக்கப்பட்ட பகுதியை விட்டு வெளியே வந்து உள்ளது.

அந்த சிங்கம், கால்நடை பகுதிகளுக்குள் புகுந்து உள்ளது. இதனை கவனித்த உரிமையாளர் அதனை சுட்டு கொன்றுள்ளார் என கார்டியன்ஸ் என்ற சிங்கங்களின் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது.

40 ஆண்டுகளில் இல்லாத வகையில் வறட்சியின் பிடியில் சிக்கி கென்யா தவித்து வருகிறது. இதனால், விலங்குகள் இடையே இயற்கையான முறையில் வேட்டையாடுவதில் சிரமம் காணப்படுகிறது. மறுபுறம் பல விலங்குகளை பறிகொடுத்த கால்நடை உரிமையாளர்களும், அதிக எச்சரிக்கையுடன் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மனித, சிங்க மோதல் ஏற்பட்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை கொல்லப்பட்ட 6 சிங்கங்கள் அன்றைய தினம் 11 ஆடுகள் மற்றும் ஒரு நாயை கொன்றுள்ளன. இந்த சம்பவம் எதிரொலியாக, உள்ளூர்வாசிகளை அழைத்து அரசு பிரதிநிதிகள் கூட்டம் ஒன்றை நடத்தி பேச்சில் ஈடுபட்டு உள்ளனர். இதில், மனித மற்றும் வனவிலங்கு மோதலை தவிர்க்கும் வகையிலான ஆலோசனைகள், மனித சமூகத்தினர் முன்பே எச்சரிக்கை அடையும் வகையிலான சாதனங்களை அமைப்பது, மோதல்களை குறைப்பது உள்ளிட்டவை பற்றி விவாதிக்கப்பட்டன.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles