வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் ஒருவர் நேற்று (13) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிரந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
உள்ஹிட்டிய கிரந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபர் மீனவர் ஒருவரே இவ்வாறு கைக்குண்டு டன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிரந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உள்ஹிட்டிய மீனவ கிராமத்தில் நபர் ஒருவர் கைக்குண்டு வைத்திருப்பதாக கிரந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா