இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்துள்ள 10 நாட்களில் மாத்திரம் 21 பேர் பலியாகியுள்ளனர்.
இதன்படி கடந்த முதலாம் திகதி ஒருவரும், 2 ஆம் திகதி இருவரும், 4 ஆம் திகதி ஒருவரும், 5 ஆம் திகதி ஐவரும், 6 ஆம் திகதி ஒருரும், 7ஆம் திகதி நால்வரும், 08 ஆம் திகதி ஒருவரும், 9 ஆம் திகதி ஒருவரும், 10 ஆம் திகதி ஐவருமாக மொத்தம் 21 பேர் பலியாகியுள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 90 சதவீதமானோர் 60 வயதைக்கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் 2ஆவது அலைமூலம் இதுவரையில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்றுவரை 28 பேர் பலியாகியுள்ளனர்.