‘கொரோனா’ ஊழித்தாண்டவம்!இலங்கையில் 23 நாட்களில் 45 மரணங்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதைத்தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

1.கொழும்பு 13 ஜிந்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.  நீண்டகாலம் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியமையே மரணத்துக்கு காரணம்.

2.கொழும்பு 15 ஐ சேர்ந்த 39 வயதுடைய ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதையடுத்து ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு கொவிட் தாக்கத்தால் ஏற்பட்ட நிமோனியாவே மரணத்துக்கு காரணம்.

3.கொழும்பு 12 ஐ சேர்ந்த 88 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவேளையிலேயே அவர் உயிரிழந்தார். இருதய நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொவிட் தாக்கமும் ஏற்பட்டதாலேயெ உயிரிழந்துள்ளார்.

4.கொழும்பு 8 பொளரை பகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.

5.கொழும்பு 13 ஐச் சேர்ந்த 88 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெறும்வேளையில் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றையடுத்து ஏற்பட்ட இருதய நோயாலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் இலங்கையில் கடந்துள்ள 23 நாட்களில் மாத்திரம் 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் 22 வரையான சுமார் 8 மாத காலப்பகுதியில் கொரோனாவால் 13 பேரே உயிரிழந்திருந்தனர்.31 ஆம் திகதியாகும்போது மரண எண்ணிக்கை 20 ஆக அதிகரித்தது.

எனினும் கடந்துள்ள 15 நாட்களில் மாத்திரம் 38 பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் கொரோனா மரணங்கள் நிகழ்ந்த வண்ணமுள்ளன. உயிரிழந்தவர்களில் 90 வீதமானோர் 60 வயதைக்கடந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று உயிரிழந்தவர்களின் விபரம்….

Related Articles

Latest Articles