குளியாப்பிட்டிய பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
50 வயதான பெண் கொவிட் தொற்றுக்குள்ளாகி, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.