“ நாட்டில் தற்போது பதிவாகும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இலங்கையானது இன்னும் அதி அபாய சிவப்பு எச்சரிக்கை மட்டத்திலேயே இருக்கின்றது.” – என்று இலங்கை மருத்துவ சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அச்சங்கத்தின் உப தலைவர் விசேட வைத்தியர் மனில்க சுமனதிலக்க கூறியவை வருமாறு,
“ நாட்டிலுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் தொற்று பரவல் விகிதத்தின் அடிப்படையில் இலங்கையானது இன்னும் அதி அபாய சிவப்பு வலயமாகவே அடையாளப்படுத்தப்படுகின்றது. இதனை பச்சை வலயமாக மாற்றிக்கொள்ள அதாவது சுற்றுலாப் பயணிகளுக்கு வருவதற்கு உகந்த சூழல் ஏற்பட வேண்டுமெனில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 950 ஆக குறையவேண்டும்.
நாளாந்தம் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனைகளில் 2.5 சதவீதத்துக்கும் குறைவான தொற்றாளர்களே அடையாளம் காணப்படும்பட்சத்தில் பச்சை வலயத்துக்குள் வரலாம். பயணக்கட்டுப்பாடு ஊடாக இதுவே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.” – என்றார் விசேட வைத்தியர்.