கொரோனா மரணங்கள் மீண்டும் அதிகரிப்பு!

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுளளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (04) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,821 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 – 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 13 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களுள் 1 ஆணும் 1 பெண்களும் அடங்குவதாகவும் 60 வயதுக்கு மேற்பட்மோரில் 05 ஆண்களும் 08 பெண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles