இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர். மூன்று பெண்களும், இரு ஆண்களுமே இவ்வாறு பலியாகியுள்ளனர். இவர்களில் நால்வர் 60 வயதடைக்கடந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
1. கொழும்பு 02 ஐச் சேர்ந்த 46 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். அவர் பிம்புர வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் நீண்டகாலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்.
2. கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவர் நெஞ்சு வலி காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார். இவருக்கும் கொரோனா தொற்றியுள்ளது.
3. கொழும்பு 12 ஐ சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மாரடைப்பே அவரின் மரணத்துக்கு காரணம்.
4. கொழும்பு 14 ஐ சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனையில் கொரோனா தொற்றினால் அவரது ஈரல் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5. கொழும்பு 15 ஐ சேர்ந்த 74 வயதுடைய ஆண் ஒருவர் தனது வீட்டில் உயிரிழந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.
