இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளனர். மூன்று பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு பலியாகியுள்ளனர். இவர்களில் மூவர் 60 வயதடைக்கடந்தவர்கள்.
இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
1. கொழும்பு 10 மாளிகாவத்தையைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் தனது வீட்டில் வைத்தே உயிரிழந்துள்ளார். நீண்டகாலமாக இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு கொரோனா வைரசும் தொற்றியதாலேயே உயிரிழந்துள்ளார்.
2.கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியைச் சேர்ந்த நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட 69 வயதுடைய பெண்ணொருவர், நோய்த்தாக்கம் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். கொரோனா வைரஸ் தொற்றுடன், நிமோனியா தாக்கமும் அதிகரித்ததால் அவர் உயிரிழந்துள்ளார்.
3. வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஆணொருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றையடுத்து ஏற்பட்ட நிமோனியாவால் அவர் உயிரிழந்துள்ளார்.
4.கனேமுல்ல பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய பெண்ணொருவர் கொரோனா தொற்றால் ஏற்பட்ட கடும் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.