கொரோனாவால் இந்தியாவில் 24 மணிநேரத்தில் 4,187 பேர் பலி

இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சத்து ஆயிரத்து 78 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 3வது நாளாக தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 4 லட்சம் கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து சீராக எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து ஓராயிரத்து 78 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 18 லட்சத்து 92 ஆயிரத்து 676 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்புகளால் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4,187 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்று 3,915 ஆகவும், நேற்று முன்தினம் 3,980 ஆகவும் இருந்தது. இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,38,270 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 609 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 79 லட்சத்து 30 ஆயிரத்து 960 ஆக உயர்வடைந்து உள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles