கொழும்பில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி – இருவர் காயம்

கொழும்பு, பெஸ்டியன் மாவத்தை பகுதியில் நபரொருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

இன்று காலை இக்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

30 வயது நபரொருவரே கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

Related Articles

Latest Articles