கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் திருத்தங்களுடன் முன்வைப்பு

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் குழுவின் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, இந்திக அநுருத்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பிரமித பண்டார தென்னகோன், ஜயந்த கடகொட, சம்பத் அதுகோரல, மிலான் ஜயதிலக, கருணாதாச கொடித்துவக்கு, பிரேம்நாத்.சீ தொலவத்த, கோகிலா குணவர்தன மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Articles

Latest Articles