‘கோட்டா அரசில் அமைச்சராக இருப்பதைவிட பிச்சை எடுப்பது மேல்’ விஜயதாச (வீடியோ)

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசில் பிரதமர் பதவியை வழங்கினால்கூட ஏற்கமாட்டேன். அந்த அரசில் அமைச்சராக இருப்பதைவிட, பிச்சை எடுப்பது மேலானது.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அத்துடன், அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின், தேவைக்கேற்பவே விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் – எனவும் அவர் கூறினார்.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்டது தவறான முடிவாகும் என சுட்டிக்காட்டிய விஜயதாச ராஜபகச், இந்த ஜனாதிபதியின்கீழ் புதிய அரசமைப்பு வரும் என நம்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.

அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தை நாடினால், கொள்ளை அடிக்க முடியாது என்பதற்காகவே, நாடாமல் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

Latest Articles