‘கோட்டா கம் ஹோம்’ – ஹிருணிக்கா அழைப்பு!

” அனுதாப அரசியலை முன்னெடுப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உலகம் சுற்றி வருகின்றார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர இன்று குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கோ ஹோம் கோட்டா என்றே நாம் வலியுறுத்தினோம். மாறாக அவரை வெளிநாடு செல்லுமாறு அழுத்தம் பிரயோகிக்கவில்லை. அவர் வெளிநாட்டில் இருப்பது எமக்கும் அவமானம். கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்ப வேண்டும்.
ஆனால் அனுதாபம் திரட்டவே அவர் மனைவியுடன் உலகம் சுற்றுகின்றார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட கோட்டா, அரசியலில் இனி எந்த பதவியை வகித்தாலும் மக்கள் ஏற்கமாட்டார்கள்.

அதேவேளை, போராட்டக்காரர்கள் வேட்டையாடப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும். ” – என்றார்.

Related Articles

Latest Articles