‘கோட்டா கோ ஹோம்’ – ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி நாளை ஆரம்பம்

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

‘ஐக்கிய மக்கள் பேரணி’ என்ற தொனிப்பொருளிலில் இந்த பேரணி நடைபெறவுள்ளது.

5 நாட்கள் தொடரவுள்ள இந்த பேரணி செவ்வாய்கிழமை (26) கண்டியில் ஆரம்பமாகி 30 ஆம்திகதி சனிக்கிழமை கொழும்பில் நிறைவடையும். 5 கட்டங்களாக இந்த பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 26 ஆம் திகதி கண்டியிலிருந்து மாவனெல்ல வரையும், 27 ஆம் திகதி மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும், 28 ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும், 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கலவரையும், 30 ஆம் திகதி யக்கலையிலிருந்து பேலியகொட வரையும் பேரணி நடைபெறவுள்ளது.

பேரணி நிறைவடைந்த மறுநாள் மே மாதம் முதலாம் திகதி கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles