கோதுமை மா விலை குறைந்தாலும் பாண், பணிஸ் விலை குறையாது

கோதுமை மா விலை குறைந்துள்ளபோதிலும், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று(18) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அனைத்து வகையான கோதுமை மா விலைகளும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரீமா நிறுவனம் அறிவித்தது.

அதற்கமைய, பாண் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விற்பனை விலை 200 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

எனினும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் குறைக்கப்பட்டதால் அவற்றின் விலைகளை மீண்டும் குறைப்பதற்கான இயலுமை இல்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related Articles

Latest Articles