கோபா குழுவின் தலைமைப் பதவி திஸ்ஸ விதாரண வசம்!

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவுசெய்யப்பட்டார்.

பாராளுமன்ற வளாகத்தில் இன்று (10) கூடிய அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பெயரை முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் அஸோக அபேசிங்ஹ வழிமொழிந்தார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகக் கடமையாற்றியிருந்தார்.

பாராளுமன்றத்தின் 119 (1) நிலையியற் கட்டளைக்கு அமைய இந்தக் குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் தெரிவுக்குழுவினால் நியமிக்கப்பட்டனர். இதன்படி, அமைச்சர் உதய கம்மன்பில, இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, லசந்த அழகியவன்ன,

வைத்தியகலாநிதி சுதர்ஷினி பெர்னாந்துபுள்ளே, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, ஹரின் பெர்னாந்து, நிரோஷன் பெரேரா, அஸோக அபேசிங்ஹ, புத்திக பத்திறண, கே. காதர் மஸ்தான், மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறீதரன், ஹேஷா விதானகே, வைத்தியகலாநிதி உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்ஹ, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹரினி அமரசூரிய ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

அரசாங்கச் செலவுகளை எதிர்நோக்குவதற்காகப் பாராளுமன்றத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டுத் தொகைகளைக் காட்டுகின்ற கணக்குகளையும் குழு தனக்கெனக் கருதும் பாராளுமன்றத்தின் முன்னிடப்படும் பிற கணக்குகளையும் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் உதவியுடன் பரிசோதனை செய்வது அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் கடைமையாகும்.

இன்றைய கூட்டத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர்களான துமிந்த திசாநாயக, தயாசிறி ஜயசேகர, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, நிரோஷன் பெரேரா, அஸோக அபேசிங்ஹ, மொஹமட் முஸம்மில், சிவஞானம் சிறீதரன், வைத்தியகலாநிதி உபுல் கலப்பத்தி, பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, வீரசுமன வீரசிங்ஹ, பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles