” ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. எமது கட்சி குறித்து ஏற்பட்டுள்ள அச்சத்தாலேயே போலி தகவல்கள் பரப்பட்டுவருகின்றன.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
” ஐக்கிய மக்கள் சக்தி 5 அணிகளாக உடையவுள்ளன என்று செய்தி வெளியிட்ட அச்சு ஊடகமொன்று, நால்வரின் படத்தையே பிரசுரித்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது குறித்த அச்சு ஊடகமும், அதனுடன் தொடர்புபட்ட தொலைக்காட்சியும் எவ்வாறு செயற்பட்டன என்பது மக்களுக்கு தெரியும்.
பிளவுபடுவதற்காக நாம் ஐக்கிய மக்கள் சக்தியை ஆரம்பிக்கவில்லை. எனவே, சஜித் தலைமையில் நிச்சயம் ஆட்சியைப் பிடிப்போம்.

போர் முடிந்த பின்னர் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்காக அனைத்து கட்சிகளையும் மஹிந்த உடைத்தார். தற்போதும் அதனை செய்வதற்கு முற்படுகின்றனர். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியை உடைக்கமுடியாது.” – என்றும் தலதா அத்துகோரள குறிப்பிட்டார்.
