சஜித்துடன் 6 ஆம் திகதி விவாதத்துக்கு அநுர ரெடி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் எதிர்வரும் ஜுன் 6 ஆம் திகதி விவாதம் நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தயாராக உள்ளார் என்று அக்கட்சியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியால் முன்மொழியப்பட்டிருந்த திகதிகள் தொடர்பில் பதிலளிக்கையிலேயே, ஜுன் 06 ஆம் திகதி விவாதத்துக்கு தயார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தலைவர்களுடனான விவாதத்துக்கு முன்னர் இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கிடையிலான விவாதத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்திருந்த முன்மொழிவு தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பதிலளிக்கவில்லை.

Related Articles

Latest Articles