சஜித்தை ஆதரிப்பதாக அறிவித்த தமிழரசுக் கட்சியின் தலைவர் அரியநேத்திரனுக்கு ஆதரவு

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரித்து மேடையேறிப் பேசினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா.

தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கும் கூட்டம் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தில் மேடையேறிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் தீர்மான அறிக்கையை வவுனியாவில் நேற்று முற்பகல் நடைபெற்ற கட்சியின் விசேட குழு கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்கள் முன்னிலையில் மாவை சேனாதிராஜா வாசித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles