சட்டதரணிகள் சங்க தலைவர் பதவிக்கு கௌசல் நவரத்ன போட்டி!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்வது இன்றுடன் (11) நிறைவடைந்த நிலையில் , தலைவர் பதவிக்காக சட்டத்தரணி கௌசல் நவரத்னவும் செயலாளர் பதவிக்காக இசுரு பாலபட்பந்தியும் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.

இன்று பிற்பகல் 12 மணியுடன் வேட்புமனுக்கள் ஏற்பு நிறைவடைந்ததோடு வேறு எந்த வேட்பாளரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாவிடின் இவர்கள் இருவரும் போட்டியின்றி பதவிகளுக்கு தெரிவுசெய்யப்படுவர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் பதவிக்கான சட்டத் துறையில் பிரபலமானவரான கௌஷல் நவரத்ன போட்டியிடுகிறார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான கலாநிதி கே. கனகேஷ்வரன், கலாநிதி பாயிஸ் முஸ்தபா, கலாநிதி ரொமேஷ் த சில்வா, இக்ராம் மொஹமட், குஷான் த அல்விஸ், காலிங்க இந்ரதிஸ்ஸ, சஞ்சீவ ஜெயவர்தன, யூ. ஆர் டி சில்வா, நளிந்த இந்ரதிஸ்ஸ, சந்திக்க ஜெயசுந்தர, ஜகத் விக்ரமநாயக்க மற்றும் ஷிரந்தி குணவர்தன ஆகியோரினால் நிறைவேற்றப்பட்ட பரிந்துரைக்கு அமையவே அவர் போட்டியிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக முன்னணி ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளிடம் பயிற்சி பெற்று அனுபவம் பெற்றுள்ள கௌஷல் நவரத்ன , சட்டத் துறையில் 26 ஆண்டுகளுக்கு மேல் தொழில் அனுபவம் பெற்றுள்ள சிரேஷ்ட சட்டத்தரணியாகும்.

சட்டத்தரணி கௌசல் நவரத்ன 2019 இல் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளராக பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டதோடு, சட்டத்தரணிகள் சங்கத்தின் பிராந்திய உப தலைவர் (கொழும்பு), செயற்குழு உறுப்பினர் மற்றும் சட்டத்தரணி மன்ற உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

அத்துடன், கொழும்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் (2014-2016) மற்றும் கொழும்பு சட்ட சங்கத்தின் தலைவர் (2016-2017) ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles