நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, பதில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு படைகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதற்காக பொதுஜன பெரமுன முழு ஒத்துழைப்பையும் வழங்கும் எனவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.










