சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனியார் கடையொன்றில் இருந்து பெருமளவான எரிபொருள் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரேதமாக சேமித்து வைக்கப்ட்டிருந்த பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை என்பன இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் எரிபொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகம் பொலிஸ் விசேட பிரிவினராலே குறித்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸாரினால் 200 லீற்றர் டீசல் , 310 லீற்றர் பெற்றோல் மற்றும் ஆயிரத்து 670 லீற்றர் மண்ணெண்ணெய் ஆகியன இதன்போது கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் விற்பனை செய்த 382 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அத்துடன், எரிபொருளை சேமிக்கும் நோக்கில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தந்த ஆயிரத்து 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த (சீ சி ரீ) பாதுகாப்பு கெமராவின் உதவியுடன் இவ்வாறு பலமுறை எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தந்தவர்கள் அடையாங்காணப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கையடக்க தொலைபேசி செயலி ஒன்றின் வாயிலாகவும் இவர்கள்; கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு அடையாளங்காணப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் பின்னர் வீடுகளுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதுடன், எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் அவதானிக்கப்படுமாயின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
