தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பந்தன் எம்.பியின் வீட்டில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், சமகால மற்றும் அடுத்தக்கட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஜனநாயக விரோதச் செயல்களை தோற்கடிப்பதற்கு எதிரணிகளாக இணைந்து பயணிப்பது பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியல் தீர்வு திட்டம் , அபிவிருத்தி, பொருளாதார விவகாரங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
