ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க களமிறங்குவதே சிறந்தது. அவருக்கே சவாலை எதிர்கொண்ட அனுபவம் உள்ளது – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
“ புதிய அரசியல் கூட்டணிகள் விரைவில் உதயமாகும். எனவே, மக்கள் நலன்சார்ந்த அதேபோல எமது கொள்கையுடன் ஒத்துபோகக்கூடிய தரப்புடன் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பேன்.” – எனவும் அவர் கூறினார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தற்போது சுயாதீனமாக செயற்படுவதுடன், நிமல் லான்சா தரப்புடன் இணைந்து செயற்பட்டுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
