சாந்தனின் புகழுடலுக்கு வவுனியாவில் இன்று உணர்வுப்பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பெருந்திரளான மக்கள் தன்னெழுச்சியுடன் கலந்துகொண்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர் பூதவுடல் தாங்கிய வாகனம் கிளிநொச்சி நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலி செலுத்திய பின்னர் புகழுடல் யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் பூதவுடல் நாளை திங்கட்கிழமை அவரது குடும்ப மயானமான எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
