” சாபக்கேடான ஆட்சி முடியட்டும் – மக்கள் ஆட்சி மலரட்டும்” – சஜித்

“ராஜபக்ச கள்வர் குடும்பத்தினர் வேண்டுமென்றே இனவாதத்தையும் மதவாதத்தையும் உருவாக்கி நாட்டை ஏழ்மைக்கு ஆளாக்கிக் கொள்கை ஒன்றும் இல்லாதவாறு செயற்பட்டனர். அவர்கள் இப்போதும் நாட்டின் அடுத்த ஆட்சியைத் தங்கள் மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு வழங்கி நாட்டை அறுதியாக்கி ராஜபக்ச ஆட்சியில் கீழ் கொண்டுவரும் நோக்குடன் செயற்படுகின்றனர். இந்தச் சாபக்கேடான ஆட்சிக்கு இனியும் எவரும் இடமளிக்கக்கூடாது.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

களுத்துறை, வாத்துவ பொதுப்பிட்டிய பிரதேச மீனவ மக்களை  சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ராஜபக்ச குடும்பத்தின் சாபக்கேடான ஆட்சியில் கோடீஸ்வரர்களுக்கு பெரும் வரிச்சலுகைகளை வழங்கி விவசாயிகளின் விவசாய உரிமைகளை இழக்கச் செய்து, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்ததனால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பரிதாபகரமான தலைவிதியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி, வீரம், மனிதாபிமானம் என்ற பொய்யான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று, தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி நாட்டையே அழித்தார். இதன் பின்னர் இரண்டரை வருடங்களின் பின்னர் இலங்கையின் 22 மில்லியன் மக்கள் நாட்டுக்கு மனித நேயம் கொண்ட மக்கள் பிரச்சினைகளை புரிந்துகொண்ட ஆட்சியொன்று தேவை எனக் கூறினாலும் தற்போதைய ஆட்சியாளர்கள் அவ்வாறான மக்கள் விருப்பத்தை வழங்கவில்லை.

போலியான வீரத்தை விட மனிதாபிமானத்தை தேர்ந்தெடுக்கும் காலம் வந்துள்ளது. தங்கி வாழும் மனநிலையை விட்டு வெளியேறி அனைவருக்கும் சிறந்ததான ஆட்சியொன்றைத் தெரிவு செய்ய வேண்டும். அதற்கு நானும் நான் சார்ந்தவர்களும் தயாராக இருக்கின்றோம்” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles