மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை மல்லியப்பு தோட்டத்தில் தனி வீடொன்றை உடைத்து சுமார் ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான தொலைக்காட்சியும், தொலைபேசியும் நேற்றிரவு களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வீட்டு உரிமையாளர், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தல் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
(ஞானராஜ் )










