பெற்றோர்களே சிந்தியுங்கள், பிள்ளைகளை வீட்டு வேலைக்கு அனுப்பாதீர்கள்.தொடர்ந்தும் எங்களுடைய பிள்ளைகளை பலிகொடுப்பதை நிறுத்தங்கள் என மலையகமக்கள் முன்னணியின்தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2021 ஜூலை மாதம் 15ஆம் திகதி மரணமடைந்த ஹிசாலினியின் துயரம்நிறைவடைவதற்கு முன்னால் மற்றுமோர் இழப்பை சந்தித்திருக்கின்றோம். எனவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை வேலைக்கு அனுப்புகின்ற பொழுது ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயற்படுங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மஸ்கெலியா, மொக்காதோட்டத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர்நீச்சல் தடாகத்தில் விழுந்துகடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர், உயிரிழந்துள்ளமைதொடர்பாக தெரியவந்துள்ளது. இந்தச் செய்தியை கேள்விப்படுகின்றபொழுது உயிரிழந்த ஹிசாலினியே நினைவுக்கு வருகின்றது. இந்த மரணங்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது பெருந்தோட்ட பகுதிகளில் நிலவுகின்ற வறுமையேயாகும்.
அத்துடன், இடைத்தரகர்கள்தங்களுடைய இலாபத்துக்காக, இவ்வாறான சிறுவர்களை வெளிமாவட்டங்களுக்குகொண்டு சென்று விற்பனை செய்கின்றார்கள் என்றார்.
இந்த இடைத்தரகர்களாக செயற்படுகின்றவர்களை இனங்கண்டு அவர்களைநீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். குறிப்பாக மலையகஇளைஞர் – யுவதிகள் இந்தவிடயத்தில் பொறுப்பாக செயற்பட வேண்டும். கிராமசேவகர்களும் தங்களுடையசமூகத்தின் மீது கரிசணையை செலுத்த வேண்டும்.
பெற்றோர்கள் சிந்தித்துசெயற்படாத வரையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பது உண்மை. மலையக பெற்றோர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏறபடுத்த வேண்டியது நம்அனைவருடைய கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.










