சிறு தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சி கருத்திட்ட ஒப்பந்தம் நீடிப்பு!

சிறிய தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துகின்ற கிராம நிதியளிப்பு வேலைத்திட்ட காலப்பகுதியை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சிறிய தேயிலைத்தோட்ட மற்றும் இறப்பர் தோட்டங்கள் மறுமலர்ச்சிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை அரசுக்கும் மற்றும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திற்கும் இடையில் ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கருத்திட்டத்தின் கீழ் “கிராமிய நிதியளிப்பு வேலைத்திட்டம்” நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நிகழ்ச்சித்திட்டம்  2022.12.31 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் மேலும் 172.35 மில்லியன் ரூபாய்கள் பயனாளிகளுக்கு கடனாக வழங்கப்படவுள்ளது. அதனால், குறித்த வேலைத்திட்டத்தின் காலப்பகுதியை 2023.06.30 ஆம் திகதி வரை நீடிப்பதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சர்  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Articles

Latest Articles