அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசு திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தக போர் முற்றியுள்ளது.
இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன.
சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 சதவீத வரியை 245 சதவீதமாக உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பதிலுக்கு சீனா அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது.
இந்த சூழலில், கப்பல் கட்டும் தொழிலில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதன் விளைவாக அமெரிக்க கப்பல் கட்டும் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
இதனை மாற்றி அமைக்க, சீன கப்பல்களை சொந்தமாக வைத்திருக்கும் நிறுவனங்கள், ஒப்பந்த முறையில் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு துறைமுக கட்டணம் விதிக்க அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒரு டன் சரக்குக்கு 50 டாலர் என்ற விகிதத்தில் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
‘இது உலகளாவிய கப்பல் செலவுகளை உயர்த்துவதோடு, உலகளாவிய தொழில்துறையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் பணவீக்க அழுத்தங்களை அதிகரிக்கிறது.” – என சீனா சீற்றம் வெளியிட்டுள்ளது.
