எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நாளை இந்தியா விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
சீன வெளியுறவு அமைச்சராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராகவும் இருக்கும் வாங் யி, அஜித் தோவலின் அழைப்பின் பேரில் ஆகஸ்ட் நாளை இந்தியா வருகிறார்.
அவர் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரையும் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங்குவது உட்பட, இரு நாட்டு எல்லையில் அமைதியை வலுப்படுத்துவதற்கான பல நம்பிக்கைகளை வளர்க்கும் விஷயங்களை இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு சிறப்பு பிரதிநிதிகளும் பரிசீலிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில், சீனாவின் முக்கிய தலைவர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.