சீரற்ற காலநிலை: இருவர் பலி: 112 வீடுகள் சேதம்!

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 600 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆயிரத்து 151 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
112 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் வெள்ளத்தால் ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் ஆயிரத்து 469 பேரும், களுத்துறையில் 529 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles