சீரற்ற காலநிலை – மரம் முறிந்து விழுந்ததில் ஹட்டனில் இருவர் காயம்!

கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக ஹட்டன் காமினிபுர பிரதேசத்தில் வீடொன்றின் மீது பாரிய மரமொன்று விழுந்துள்ளது.

இன்று (03.10.2022) அதிகாலை 1.30 மணியளவில் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் வீட்டின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததாக வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்தனர்.

மரம் முறிந்து வீழ்ந்ததில் , வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த இருவர் காயமடைந்துள்ளனர்.

Related Articles

Latest Articles