சுகாதார பணியாளர்கள் கம்பளையில் போராட்டம் (படங்கள்)

கம்பளை வைத்தியசாலையில் பணியாற்றும் சுகாதார சேவையாளர்கள் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கொடுப்பனவுகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் இன்று சுகாதார ஊழியர்கள் காலை 7 மணி முதல் பகல் 12 மணிவரை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதன் ஓர் அங்கமாகவே கம்பளை வைத்தியசாலை பணியாளர்களும் போராட்டத்தில் இறங்கினர். பேரணியும் முன்னெடுக்கப்பட்டது.

சுகாதார சேவைகள் ஒன்றிணைந்த தொழிற்சங்கமே போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

Related Articles

Latest Articles